எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் ... வாகன ஏற்றுமதி வருவாய் 6 சதவீதம் குறைவு வாகன ஏற்றுமதி வருவாய் 6 சதவீதம் குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
டாடா ஸினான் டஃப் டிரக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2013
16:55

டாடா மோட்டார்ஸ் ஆஸ்திரேலியாவில் ஸினான் பிக்கப் டிரக் மாடலை அக்டோபர் முதல் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த பிக்கப் டிரக்கை ஆஸ்திரேலியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஸினான் பிக்கப் டிரக்கின் டஃப் டிரக் என்ற கான்செப்ட்டை டாடா வெளியிட்டிருக்கிறது. வார இறுதியான இன்றும், நாளையும் மெல்போர்ன் நகரில் நடைபெறும் கண்காட்சியில் இந்த கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்று கூறும் அளவுக்கான அம்சங்களை கொண்டிருக்கும்.

* டாடா மோட்டார்ஸின் ஆஸ்திரேலிய வினியோகஸ்தரான ஃபியஷன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும், டாடா மோட்டார்ஸும் இணைந்து இந்த கான்செப்ட்டை உருவாக்கியுள்ளன. இந்த கான்செப்ட்டுக்கு வால்கின்ஷா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை டிசைனர் ஜூலியன் குயின்ஸி தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹோல்டன் பெர்ஃபார்மென்ஸ் வெகிக்கிள்ஸ் தலைமை டிசைனரும் இவர்தான்.

* ஸினானின் உருவத்தை பல படிகள் உயர்த்திப் பிடிக்கும் வகையிலான பிரத்யேக ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ரூஃப் லைட்டுகள், எல்இடி ஸினான் ஸ்பாட் லைட்டுகள், பகல் நேர ரன்னிங் விளக்குகள் என அலங்காரமாக காட்சி தருகிறது நம்ம ஸினான். இவை அனைத்தும் நர்வா என்ற பிரபல நிறுவனத்தின் தயாரிப்புகள்.

* 20 இஞ்ச் பில்லட் அலுமினிய சக்கரங்கள், ஆஃப் ரோடு பயணங்களுக்கான பிரத்யேக டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர ஆர்டன் பெயின்ட் பூசப்பட்டிருக்கிறது.

* இந்த பிக்கப் டிரக் கான்செப்ட்டில் 2.2 லிட்டர் டைகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. யூரோ 5 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இந்த எஞ்சின் 148 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

*சாலை நிலைகளுக்கு ஏற்ப 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான ஷிப்ட் ஆன் ப்ளை ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பமும் இதில் உண்டு.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)