டிவி,மொபைல் விலை உயர்கிறதுடிவி,மொபைல் விலை உயர்கிறது ... டாலருக்கு எதிராக மதிப்பு ரூ. 66 ஆக சரிவு டாலருக்கு எதிராக மதிப்பு ரூ. 66 ஆக சரிவு ...
இரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
16:59

சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம். உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. இந்த போனில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் இயங்குகிறது.ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் துணையுடன் செயல்படுகிறது. முன்புறமாக 1.9 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இன்னும் பல சிறப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 118 x 59.5 x 15.8 மிமீ ஆகும். எடை 179 கிராம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,820mAh திறன் கொண்டதாகும். சென்ற வாரம் முதல் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த போன், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப் படலாம்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)