பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:12

நாமக்கல்:கேரளா மாநிலத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் கறிக்கோழிகள் விலை, ஒரு கிலோவுக்கு, 95 ரூபாய் என, அம்மாநில வணிக வரித்துறை, விலை நிர்ணயம் செய்துள்ளது. இது, கோழி உற்பத்தியாளர்களை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.தமிழகத்தில், பல்லடம், பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய பகுதிகளில், கறிக்கோழி அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
விலை நிர்ணயம்:பல்லடத்தில் உள்ள தேசிய கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையை, அடிப்படையாக வைத்து, கறிக்கோழி வியாபாரிகள் பண்ணைகளில், கறிக்கோழியை கொள்முதல் செய்து, கேரள மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.வாரம், 20 லட்சம் கிலோ கறிக்கோழி, கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அம்மாநிலத்துக்குள் கொண்டு செல்லப்படும் கறிக்கோழிக்கு, 13.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு, அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோழிக்கறி உணவு வகைகளை நிறுத்தியிருந்தனர்
.
தற்போது, கேரள அரசு, கறிக்கோழிகளுக்கு, "பிளாட் ரேட்' நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்,ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, 95 ரூபாயாகவும், ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளின் விலை, 45 ரூபாயாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது என, கேரள அரசின் வணிகவரித் துறை ஆணையாளர் ஷியாம் ஜெகாதன் அறிவித்து உள்ளார்.
இதன்படி, கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும், ஒரு கிலோ கறிக்கோழிக்கு, 95 ரூபாய் அடிப்படை விலையாக வைத்து, வியாபாரிகள், 13.5 சதவீதம் வரி கட்டினால் தான், அம்மாநிலத்துக்குள் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
பாதிப்பு:இதனால், கேரளாவில், கறிக்கோழியின் விலை அதிகரிக்கும்; அதே வேளையில், தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவர்.கறிக்கோழி வியாபாரத்தில், கேரளாவை பெரிதும் நம்பி யுள்ள தமிழக உற்பத்தியாளர்களுக்கு, விலை நிர்ணய முறை, கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என, பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழக கறிக்கோழிகளை நசுக்கும் நடவடிக் கையில், கேரள மாநில அரசு ஈடுபட்டு உள்ளது. அம்மாநிலத்தில், முட்டை, கறிக்கோழி உற்பத்தியை அதிகரிக்க, அரசு எடுத்த முயற்சி நடக்கவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், கறிக்கோழிக்கு வரி விதிப்பு இல்லை.
வியாபாரிகள்:சீசன் இல்லாத காலங்களில், ஒரு கிலோ கறிக்கோழி,40 ரூபாய் வரை சரியும். கேரள அரசின் அறிவிப்பு படி,அந்த நேரத்திலும்,95 ரூபாய் அடிப்படையில்,13.5 சதவீத வரி கட்டவேண்டிய நிலை ஏற்படும்.அதே நேரம் கறிக் கோழி வளர்ப்பவர்கள், வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|