பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:18

சென்னை:சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகளின் பிரத்யேக படத்துடன் கூடிய தபால் தலைவிற்ப னையை இந்திய அஞ்சல் துறை துவக்கி உள்ளது.பார்வையாளர்கள்உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ள வரும் பயணிகள், அவர்களை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் ஆகியோர், 322 ரூபாய் செலுத்தி, தங்கள் முகத்தோற்றத் தைக் கொண்ட, 12 தபால் தலைகளை பெற விண்ணப்பிக்கலாம்.
இதனுடன், அடையாள அட்டை சான்று மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப் படத்தை வழங்க வேண்டும். 10 நாட்களுக்குள், விண்ணப்பதாரரின் முகவரிக்கு, புகைப்பட தபால் தலைகள் அனுப்பி வைக்கப்படும்.சென்னை வரும் விமான பயணிகள்,தங்கள் நினைவாக,இந்த பிரத்யேக அஞ்சல் தலைகளை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.விரைவில்,சென்னை, சர்வதேச விமான நிலையத்திற்கும் இச்சேவை விரிவுபடுத்தப் படும் என,அஞ்சல் துறை யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை வரும் வெளிநாட்டுபயணிகள்,பிரத்யேக தபால் தலைகளுடன் ஊர் திரும்பி, உற்றார், உறவினருடன், சுற்றுலா அனுபவங்களை நினைவு கூறலாம் என, அவர் மேலும் கூறினார்.தபால் நிலையங்கள்சென்னை விமான நிலையம் தவிர, நாட்டின் முக்கிய தபால் நிலையங்களிலும், இந்த பிரத்யேக தபால் தலை, விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|