பதிவு செய்த நாள்
28 ஆக2013
11:43

சென்னை : தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தும், அவ்வப்போது சரிந்தும் காணப்படுகின்றன. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,152 குறைந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 28ம் தேதி, புதன்கிழமை) ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,971-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.23,768-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து ரூ.31,780-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை, தங்கத்தை காட்டிலும் அதிவேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 2.80 காசுகள் உயர்ந்து ரூ.64.40-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.2,545 உயர்ந்து ரூ.60,155-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|