பதிவு செய்த நாள்
28 ஆக2013
17:46

மும்பை: இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை 0.74 சதவீதம் மட்டுமே அதிகரித்து 2.60 கோடியாக உயர்ந்துள்ளது.விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் செலவினத்தில் பெரும்பகுதி அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருவதால், இந்நிறுவனங்களின் சம்பள செலவினம் மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும் எரிபொருள் விலையும் அதிகமாக உள்ளது.அதிகரித்து வரும் செலவினத்தை கட்டுப்படுத்தும் வகையில் விமான பயணக் கட்டணத்தை உயர்த்த முடியாத நிலையில் நிறுவனங்கள் உள்ளன. தொழில்துறை உற்பத்தி பின்னடைவு, பொருளாதார மந்த நிலை காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விமான பயண கட்டணம் குறைவாக உள்ளது என விமானச் சேவை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது விமான பயணக் கட்டணம் 25 சதவீதம் குறைவாக உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.விமானச் சேவை நிறுவனங்களில் வருவாய் குறைந்துள்ள நிலையில், செலவினம் அதிகரித்து வருகிறது. எனவே நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) இந்நிறுவனங்களுக்கு சுமார் 45 கோடி டாலர் (ரூ.2,880 கோடி) இழப்பு ஏற்படும் என சிட்னியைச் சேர்ந்த விமான போக்குவரத்துச் சேவை அமைப்பு (சி.ஏ.பி.ஏ) மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|