பதிவு செய்த நாள்
30 ஆக2013
02:06

புதுடில்லி:உணவு பாதுகாப்பு மசோதாவால், மத்திய அரசின், நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் என,சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, மிகக் குறைந்த விலையில், அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்களை மக்களுக்கு அளிக்கும் வகையில், உணவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு, பார்லிமென்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நிதிச்சுமை:இத்திட்டம் அமல்படுத்தும் நிலையில், அது, மத்திய அரசின் நிதிச் ”மையை அதிகரிப்பதுடன், இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என, மூடீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு திட்டத்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), உணவு மானியத்திற்கான ஆண்டு செலவினம், 1.2சதவீதமாக அதிகரிக்கும். இது தற்போது, 0.8சதவீதம் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 82 கோடி இந்திய மக்களுக்கு, மிகக் குறைந்த விலையில், உணவு தானியங்கள் வழங்கப்படும். இது, உலகளவில், மிகப் பெரிய திட்டமாகக் கருதப்படுகிறது.
பணவீக்கம்:தற்போதைய நிலவரப்படி, இந்த உணவு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், அதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும்.நடப்பு நிதியாண்டின் எஞ்சிஉள்ள மாதங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம், 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும். இதில், 10 ஆயிரம் கோடி ரூபாய் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தற்போதைய மானியச் சுமையால், நாட்டின் பொது பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வரும் போது, அது, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதுடன், நிதிப் பற்றாக்குறையையும் உயர்த்தி விடும் என, மூடீஸ் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய, அதிகளவில் இறக்குமதி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால், நிதிச் ”மை அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் உயர வழிவகுக்கும்.
கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புசரிவடைந்து வருகிறது. குறிப்பாக, நடப்பாண்டில் இதுவரையிலுமாக, ரூபாய் மதிப்பு, 25சதவீதம் சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம், வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு, 68.80 ஆக வீழ்ச்சி கண்டது. உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி, கிராமப்புற மக்களுக்கு, 75சதவீத அளவிற்கும், நகர்ப்புற மக்களுக்கு, 50சதவீத அளவிற்கும் உணவு தானியங்களை, மத்திய அரசு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
தர குறியீடு:மூடீஸ் நிறுவனம், தற்போது இந்தியாவிற்கு, "பீஏஏ3' என்ற தரக்குறியீட்டை அளித்துள்ளது. அதாவது, இந்தியா, நிலையான பொருளாதாரம் மற்றும் மிதமான கடன் இடர்ப்பாட்டை கொண்டுள்ளது என்பதாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|