பதிவு செய்த நாள்
30 ஆக2013
12:27

புதுடில்லி : நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில் இன்று விளக்கம் அளித்தார். கடும் அமளிக்கு இடையே உரையாற்றி பிரதமர் கூறியதாவது : அமெரிக்க டாலரில் ஏற்றம் ஏற்பட்டதால் இந்தியா ரூபாய் உள்ளி உலக நாடுகளின் நாணய மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது; இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு கவலை அளிக்கிறது; எதிர்பாராத வெளிநாட்டு சூழ்நிலை காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது; சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க திட்டமிட்டுள்ளதும் ரூபாயின் மதிப்பு சரிவிற்கு காரணம்; அமெரிக்க மத்திய வங்கியின் முடிவால் வளரும் நாடுகளில் இருந்து டாலர் வெளியேறுகிறது; சூழ்நிலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; ஏற்றுமதி நிலையை சீர்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவைப்படுகிறது; ரூபாய் வீழ்ச்சி எதிர்பாராத ஒன்று; தங்கம் மற்றும் எண்ணெய் தேவையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது; தற்போது ரூபாய் மதிப்பு சரிவால் பொருளாதார கொள்கைகளை திரும்பப் பெறும் பேச்சிற்கே இடமில்லை; நடப்பு கணக்கு பற்றாக்குறையை 70 மில்லியன் டாலருக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ரூபாய் மதிப்பு சரிவால் பல துறைகள் பயனடைந்து வருகின்றன; நடப்பு பற்றாக்குறையும் ரூபாய் சரிவிற்கு காரணம்;நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை மாற்று நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது; நடப்பு காலாண்டின் துவக்கத்தில் வளர்ச்சி பழையநிலையிலேயே இருக்கும்; இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சி வேகம் பெறும்; பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; மானியங்கள் மற்றும் பிற செலவீனங்களை கவனமாக கையாள வேண்டும்; இந்திய வங்கிகள் சர்வதேச வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு சரிவால் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது; போதிய அளவு பருவமழை பெய்து வருவதால் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|