பதிவு செய்த நாள்
30 ஆக2013
15:39

புதுடில்லி: "ரூபாய்க்கான குறியீட்டுடன் புதிய, 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன், 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகளில், ரூபாய்க்கான சின்னம் இடம் பெறுவதோடு, ரிசர்வ் வங்கி கவர்னர், சுப்பாராவின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். அதேபோல், விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு, 5 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்படும். வைஷ்ணவி தேவி கோவில் வாரியத்தின், வெள்ளி விழா கொண்டாட்டங்களை நினைவு கூறும் வகையில், புதிய, 10 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்படும். புதிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|