பதிவு செய்த நாள்
30 ஆக2013
20:34

ஆல்வீல் ட்ரைவ், போர் வீல் ட்ரைவ் இரண்டிற்கும் என்ன வித்தியாசம், ஆல்வீல் ட்ரைவ் என்பது நான்கு சக்கரங்களையும் தொடர்ந்து இயக்குவது மற்றும் எல்லாவிதமான சாலை மற்றும் ஓட்டும் முறைகளிலும், அதிக பட்ச இழுக்கும் விசையை அளிப்பதும் ஆகும்.
போர் வீல் ட்ரைவ் என்பது, நான்கு வீல்களையும் நம் தேவைக்கேற்ப நாமே இயக்கக்கூடியதாகவோ (மானுவல்) அல்லது மாறுபடும் வேகத்திற்கேற்ப முன்புறமோ, பின்புறமோ உள்ள ட்ரைவ் ஷாப்ட் சுற்றாமல், நிற்கக்கூடிய டிபரென்ஷியில் கொண்டு இயங்குவதோ ஆகும். ஆல் வீல் ட்ரைவ் மிகவும், வழுவழுப்பான தரைகளுக்கு ஏற்றதாகவும், தார்ச்சாலை அல்லாத இடங்களில் ஓட்டுவதற்கும் ஏதுவானதாகும்.
ஆல்வீல் ட்ரைவ் மிகவும் வழுவழுப்பான தரைகளுக்கு ஏற்றதாகவும், தார்ச்சாலை அல்லாத இடங்களில் ஓட்டுவதற்கும் ஏதுவானதாகும். ஆல் வீல் ட்ரைங் என்பது, முழுநேரமும் இயங்கக்கூடியதென்பதால், ஓட்டுனர் தானாய் இயக்க வேண்டிய அவசியமில்லை. ஆல் வீல் ட்ரைவ் என்பது எடைகுறைவானது மட்டுமின்றி, மிகவும் அடக்கமாகவும், இதன் வடிவம் இருக்கும். இதனாலேயே, பல செடான் மற்றும் எஸ் யு வி கார்களில் ஆல் வீல் ட்ரைவ் பொருத்தப்படுகிறது. போர் வீல் ட்ரைவை இரண்டு வகையாக பிரிக்கலாம். பார்ட்டைப் மற்றும் புல் டைம் என்று பார்டைமில் ஓட்டுனர் , டூவீல் ட்ரைவிலிருந்த போர் வீல் ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். போர் வீல் ட்ரைவில் இருக்கும் போது, காய்ந்த மற்றும் சாதாரண சாலைகளில் வண்டியை இயக்கக்கூடாது. புல் டைம் 4WD போர்வீல், வாகனங்களில் டிபரன்ஷயல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கிங் மற்றும் பின்னியன் செட் அல்லது பளானிட்டரி இயர் செட் மூலம், மொத்த இழுக்கும் விசையில், 25 சதவீதம் ஒவ்வொரு சக்கரத்திற்கும் அனுப்பப்படும். வீல் சுழற்றப்பட்டு (கரடு முரடாக சாலைகளில் சாலை ஸ்திரத்தன்மையை இழக்காமல் இருக்க, சென்ட்ரல் ப்ரென்ஷியல்லாக் கொடுக்கப்பட்டிருக்கிறது. போர் வீல் ட்ரைவ் உள்ள வாகனங்களில், லோ - ரேன்ஜ் இயர்கள் கரடுமுரடான பாறைகள் செங்குத்தான சரிவுகள் ஆழமான நீர் உள்ள இடங்கள் போன்றவற்றில், பயணம் செய்கையில் உபயோகித்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும். இதனாலேயே, 4 WD உள்ள வாகனங்கள், சற்றே எடை கூடுதலாக வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி எரிபொருள் உபயோகமும் கூடுதலாகலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|