நாட்டின் நேரடி வரி வசூல்ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வுநாட்டின் நேரடி வரி வசூல்ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வு ... தரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சி தரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சி ...
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி முன்னிலை:பாசுமதி அரிசியுடன் போட்டி போடுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
00:34

நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், முதல் மூன்று இடங்களில், மாட்டிறைச்சி இடம் பிடித்துள்ளது. இது, ஏற்றுமதியில், பாசுமதி அரிசிக்கு கடும் போட்டியாக உருவெடுத்து வருகிறது.இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி, கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு, 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.பங்களிப்பு:கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியா, 320 கோடி டாலர் மதிப்பிலான, 11.06 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து, சர்வதேச சந்தையில், 50 சதவீத பங்களிப்புடன் முன்னேறியுள்ளது.
இது, 2011-12 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், முறையே 286 கோடி டாலர் (9.85 லட்சம் டன்) மற்றும் 188 கோடி டாலர் (72.62 லட்சம் டன்) ஆக இருந்தது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - மே மாதங்களில், 57.80 கோடி டாலர் மதிப்பிலான மாட்டுஇறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதே வேகத்தில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டால், நடப்பு நிதியாண்டில், பாசுமதி அரிசியை விஞ்சி, முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இருந்து வியட்னாம், மலேசியா, எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு, அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி ஆகிறது. இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளின் தோல், பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.மாட்டிறைச்சி விற்பனையில் முன்னணியில் உள்ள பிரேசில் நாடு, ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
இது, இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. இத்துடன், சீனாவில் மாட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.பிரேசில்:சென்ற நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், ஒரு டன் மாட்டிறைச்சியை, சராசரியாக, 2,900 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்தனர். இது, தற்போது, 3,500 டாலராக அதிகரித்துள்ளது. பிரேசிலின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தொய்வு, சீனாவில் தேவை அதிகரித்து வருவது போன்றவை, இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களுக்கு கொழுத்த வர்த்தகத்தை வழங்கியுள்ளது.இந்தியாவில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில், 146 ஆண்டுகள் பழமையான, மும்பையை சேர்ந்த, அல்லானா சன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், காப்பி ஏற்றுமதியிலும் முதலிடத்தில் உள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்நிறுவனத்தின், 22,500 கோடி டாலர் ஏற்றுமதியில், மாட்டுஇறைச்சியின் பங்களிப்பு, 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில், மாட்டிறைச்சிக்கும், பதப்படுத்தும் பணிகளுக்குமாக, 42 கசாப்பு களங்கள் உள்ளன. இவற்றில், ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையத்தின் (அபிடா) அங்கீகாரம் பெற்ற, அதிநவீன பதப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, கசாப்பு களங்களின் எண்ணிக்கை, 32 ஆக உள்ளது. இத்துறையில், நேரடியாக, 74 ஆயிரம் பேரும், மறைமுகமாக, 1.50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பால் உற்பத்தி:கடந்த 2007ம் ஆண்டு, கால்நடை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில், 10.53 கோடி மாடுகள் உள்ளன. இது, உலகின் ஒட்டு மொத்த இறைச்சி மாடுகளின் எண்ணிக்கையில், 50 சதவீதமாகும்.இனவிருத்திக்கு உதவாத, இறைச்சி மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, கறவை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தியா, பால் உற்பத்தியில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.பஞ்சாப், ஐதராபாத், அலிகார், அவுரங்காபாத், உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில், மாடுகளும், அவற்றின் இறைச்சியும் கொள்முதல் செய்யப்படுகின்றன.இந்தியாவில் இருந்து, ஆண்டுக்கு, 500 கோடி டாலர் மதிப்பிலான கால்நடைகள், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)