கேரள மீன் வரத்து அதிகரிப்புகருவாடு விலை "சரிவு'கேரள மீன் வரத்து அதிகரிப்புகருவாடு விலை "சரிவு' ... திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவராக சக்திவேல் தேர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவராக சக்திவேல் தேர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் முன்னேற்றம்:சலுகைகளை வாரி வழங்கியதால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
01:32

புதுடில்லி:பல முன்னணி நிறுவனங்களின் சலுகை திட்ட அறிவிப்புகளால், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.பொருளாதார மந்த நிலை, எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற, பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும், மதிப்பீட்டு மாதத்தில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.
வரவேற்பு:வாகன விற்பனை அதிகரித்து உள்ளது குறித்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அனில் துவா (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) கூறியதாவது:சந்தையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், நிறுவனத்தின் பல்வேறு ஊக்குவிப்புத் திட்ட சலுகைகளால், இருசக்கர வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.குறிப்பாக, நிறுவனத்தின், ஐந்து ஆண்டு வாரண்டியுடன் கூடிய, வாகன விற்பனை திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, தனிநபர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவது சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.பருவ நிலை நன்கு உள்ளது மற்றும் பண்டிகை காலம் தொடர்ச்சியாக வரவிருப்பதைஅடுத்து, எதிர்வரும் மாதங்களிலும், வாகன விற்பனை சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அனில் துவா கூறினார்.
மாருதி சுசூகி:இந்நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 87,323 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 54,154 ஆக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 61 சதவீதம் அதிகரித்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 51.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50,129 என்ற எண்ணிக்கையிலிருந்து, 76,018 ஆக அதிகரித்துள்ளது.
இதே போன்று, இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், மூன்று மடங்கு வளர்ச்சி கண்டு, 4,025லிருந்து, 11,305 ஆக உயர்ந்து உள்ளது.ஹூண்டாய் மோட்டார்:கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில், இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 11.56 சதவீதம் வளர்ச்சி கண்டு, 52,319ஆக உயர்ந்துள்ளது.இதன் கார் ஏற்றுமதியும், 29 சதவீதம் உயர்ந்து, 24,008 ஆக அதிகரித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்உள்நாட்டில் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை, 3.64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,59,996 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 4,43,801 ஆக இருந்தது.டி.வி.எஸ் மோட்டார்:சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 0.57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,55,532 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1,54,647 ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 14.23 சதவீதம் அதிகரித்து, 61,313 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், ஸ்கூட்டர் விற்பனை, 4.49 சதவீதம் சரிவடைந்து, 36,478 ஆக குறைந்துள்ளது.இதன் வாகன ஏற்றுமதி, 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 27,425 ஆக அதிகரித்து ள்ளது.டாட்டா மோட்டார்ஸ்:இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 31 சதவீதம் சரிவடைந்து, 49,611 ஆக குறைந்து உள்ளது. இந்நிறுவனம், கணக்கீட்டு மாதத்தில், 4,894 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.இந்நிறுவனம், நடப்பு நிதிஆண்டில், சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், ஒட்டு மொத்தமாக, 2,54,355 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனம், 20,606 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஹோண்டாஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 38.77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,08,932 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 2,22,613 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 50.23 சதவீதம் அதிகரித்து, 1,04,253 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,56,629 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், ஸ்கூட்டர் விற்பனையும், 28.67 சதவீதம் உயர்ந்து, 1,18,360லிருந்து, 1,52,303 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)