பதிவு செய்த நாள்
03 செப்2013
01:52
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 80 ரூபாய் குறைந்து, 22,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று, குறைந்து காணப்பட்டது.சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,842 ரூபாய்க்கும், 1 சவரன், 22,736 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 2,832 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் சரிவடைந்து, 22,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 105 ரூபாய் குறைந்து, 30,290 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 61.60 ரூபாய்க்கும், 1 கிலோ பார் வெள்ளி, 57,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|