பதிவு செய்த நாள்
03 செப்2013
01:54
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் துவக்க நாளான திங்களன்று சரிவைக் கண்டது.கடந்த வாரம், வர்த்தக இறுதி நாளான வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 65.70 ஆக இருந்தது. இந்நிலையில், அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 14 கா”கள் சரிவடைந்து, 65.84 ஆக, காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 65.84 - 66.15 என்ற அளவில், ஏற்ற, இறக்கமாக இருந்தது.இருந்த போதிலும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 32 கா”கள் குறைந்து, 66.02ல் நிலை பெற்றது.உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு பிறகே, சிரியா போர் நடைபெறும் என்பதால், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது போன்றவற்றுக்கு இடையிலும், நேற்று ரூபாய் மதிப்பு குறைந்தது.வங்கிகளும், இறக்குமதி நிறுவனங்களும் அதிக அளவில் டாலரை வாங்கியதால், ரூபாய் மதிப்பு குறைந்தது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|