தங்கம் விலை ரூ.264 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.264 உயர்ந்தது ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ...
பயன்படுத்திய போனுக்கு புதிய போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
14:31

பைபேக் என்று சொல்லப்படும், பயன்படுத்திய பழைய மொபைல் போன்களுக்கு, ஒரு விலை போட்டு எடுத்துக் கொண்டு தங்களின் புதிய மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தினை சோனி, நோக்கியா, சாம்சங் போன்ற அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், தற்போது பின்பற்றி வருகின்றன. இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம், புதியதாக இத்திட்டத்தில் இறங்கியுள்ளது. எல்.ஜி. தன்னுடைய ஆப்டிமஸ் ஜி ப்ரோ (Optimus G Pro) மொபைல் போனை, சென்ற ஜூலை மாதம் இந்தியாவில் ரூ.42,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது, வாடிக்கையாளர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொண்டு, இதனை விற்பனை செய்கிறது. பயன்படுத்திய ஸ்மார்ட் போனுக்கு ரூ.7,000 தருகிறது. இத்துடன், வட்டி இல்லாமல், மாதத் தவணையிலும் போன்களை விற்பனை செய்கின்றது. குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு, கடன் விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது. இந்தியாவில் இயங்கும் எல்.ஜி. விற்பனை மையங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. சாம்சங், தன் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வாங்குவோருக்கு, இதே போன்ற திட்டம் ஒன்றை வழங்கி, பயன்படுத்திய போன்களுக்கு முதலில் ரூ.5,000 தள்ளுபடி விலையாக வழங்கியது. பின்னர் இதனை ரூ.7,000 ஆக உயர்த்தியது நினைவிருக்கலாம். எல்.ஜி. எந்த போன்களுக்கெல்லாம், இந்த தள்ளுபடி விலையினைத் தருகிறது என்ற தகவலைத் தரவில்லை. இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் அல்லது இணைய தளத்தில் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இந்த போனுக்கு எல்.ஜி. இரண்டு ஆண்டு வாரண்டி அளிக்கிறது. பெரும்பாலான மற்ற மொபைல் நிறுவனங்கள், ஓராண்டு மட்டுமே, வாரண்டி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம் வெள்ளி சந்தை செப்டம்பர் 03,2013
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 03,2013
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)