பயன்படுத்திய போனுக்கு புதிய போன்பயன்படுத்திய போனுக்கு புதிய போன் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு தொடர்ந்து சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
00:33

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு,நேற்று கடும் வீழ்ச்சி கண்டது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 66.02 ஆக இருந்தது.இந்நிலையில, அன்னியச் செலாவணி சந்தையில்,நேற்று வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 66.27 ஆக வீழ்ச்சி கண்டது. அதன் பின்னர்மேலும் சரிவடையத் துவங்கியது. ஒரு கட்டத்தில், ரூபாய் மதிப்பு, 68.26 ஆக, கடுமையான சரிவை சந்தித்தது.
எனினும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட,1.71 கா”கள் குறைந்து, 67.63 ல் நிலை பெற்றது. இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு, இந்தோனேஷியாவை விட, குறைய வாய்ப்புள்ளதாக, சர்வதேச தர ஆய்வு நிறுவனமான, எஸ் அண்டு பி., அறிக்கை வெளியிட்டது. இத்துடன், சிரியாவில்போர் மூள்வதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.
மேலும், பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, முகவர்கள், வழக்கத்தை விட, அதிக அளவில் டாலர் வாங்கியது, வங்கிகளின் டாலர் விற்பனை குறைந்ததுபோன்றவையும், ரூபாய் மதிப்பு சரிய வழி வகுத்தன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)