பதிவு செய்த நாள்
09 செப்2013
00:42

மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும், என்.ஆர்.இ., குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் முதல், 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னராக, அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன், அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவித்திருந்தார்.இந்நிலையில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டை அதிகளவில் கவரும் வகையில், அதற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 9 சதவீதத்திலிருந்து, 9.50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், 1 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி, 0.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 8.50 சதவீதத்திலிருந்து, 9.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.மேற்கண்ட அனைத்து டெபாசிட்டுகளின் முதிர்வு காலம், 3 முதல் 5 ஆண்டுகள். இப்புதிய வட்டி விகிதம், செப்டம்பர், 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|