பதிவு செய்த நாள்
10 செப்2013
01:06

புதுடில்லி:சென்ற ஜூலையில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 16 சதவீதம் அதிகரித்து, 15.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 13.30 கோடி கிலோவாக இருந்தது.மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 26.89 சதவீதம் உயர்ந்து, 3.28 கோடி கிலோவில் இருந்து, 4.17 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 20.20 சதவீதம் அதிகரித்து, 7.71 கோடி கிலோவில் இருந்து, 9.29 கோடி கிலோவாக உயர்ந்து உள்ளது.இதே காலத்தில், தென்னிந்தியாவின் தேயிலை உற்பத்தி, 17.86 சதவீதம் சரிவடைந்து, 1.68 கோடி கிலோவாக குறைந்துள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு, 87 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.உலகில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 3.62 சதவீதம் அதிகரித்து, 109.50 கோடி கிலோவில் இருந்து, 113.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|