பதிவு செய்த நாள்
10 செப்2013
01:08
புதுடில்லி:ரூபாய் மதிப்பு குறைந்துள்ள போதிலும், உள்நாட்டு தேவையை கருதி, யூரியா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என, மத்திய உரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜனா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டில், யூரியாவிற்கான தேவையை, நாம் ஈடு செய்ய வேண்டும். யூரியாவிற்கு பற்றாக்குறை ஏற்படக் கூடாது. எந்த அளவிற்கு யூரியா தேவைப்படுகிறதோ, அதற்கேற்ப சப்ளை செய்யப்படும். யூரியாவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு, கள்ளச் சந்தை விற்பனைக்கு வழி வகுக்க விட மாட்டோம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், யூரியா இறக்குமதி தொடரும். அதற்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.சென்ற நிதியாண்டில், 300 கோடி டாலர் மதிப்பிலான, 70.40 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது.நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், 61.40 கோடி டாலர் (3,700 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, 20 லட்சம் டன்னிற்கும் அதிகமான யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு, விவசாயிகளுக்கு, மானிய விலையில், யூரியாவை வழங்கி வருகிறது. ஒரு டன் யூரியாவின் அதிகபட்ச சில்லரை விலை, 5,360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|