பதிவு செய்த நாள்
10 செப்2013
10:50

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 245.45 புள்ளிகள் அதிகரித்து 19515.51 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 58.10 புள்ளிகள் அதிகரித்து 5738.50 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 290.30 புள்ளிகள் அதிகரித்து, 19,270.06 புள்ளி களில் நிலை கொண் டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,19,293.96 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,929.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாட்டா பவர், கோல் இந்தியா, சேச கோவா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 87.45 புள்ளிகள் உயர்ந்து, 5,680.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,688.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,566.15 புள்ளிகள் வரையிலும் சென்றது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|