பதிவு செய்த நாள்
10 செப்2013
15:28

கடலூர்:கர்நாடகா மாநில அரிசி வருகை அதிகரிப்பால், தமிழகத்தில் உயர்ந்து வந்த அரிசி விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் அபரிமிதமான விளைச்சல் தரும் சம்பா போகம் கடும் பாதிப்பிற்குள்ளானது. நிலத்தடி நீர் உள்ள தாலுகாக்களில் மட்டும் நெல் விளைச்சல் இருந்தது. இதனால் நெல் விலை கடுமையாக உயர்ந்தது.மார்க்கெட்டில் உயர்ந்து வரும் அரிசி விலையக் குறைக்க, தமிழக அரசு மலிவு விலை அரிசியை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்தது. நுகர்பொருள் வாணிபக் கடைகள் மட்டுமல்லாமல் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அரிசி விற்பனை செய்யப்பட்டது.மலிவு விலை அரிசிஆனால், தரமில்லாத அரிசி விற்கப்பட்டதால் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாமல் போனது. இதனால் மலிவு விலை அரிசி விற்பனை படிப்படியாக மந்தமானது. தற்போது சி.ஆர்.1009 என்ற இட்லி அரிசி மட்டும் விற்பனையாகிறது. அதுவும் மாவட்டம் முழுவதும் 500 கிலோ மட்டுமே விற்பனையாகிறது.
இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.கர்நாடகா அரிசி வரத்துஇந்நிலையில், தற்போது கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் அரிசி விலை கணிசமாக குறைந்துள்ளது. ஏற்கனவே விற்பனையான பி.பி.டி., அரிசி கிலோ 44 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக குறைந்துள்ளது. டீலக்ஸ் கிலோ 38லிருந்து 30 ரூபாயாகவும், ஐ.ஆர்.50 ரகம் 30 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்துள்ளது. கர்நாடகா அரிசியில் இரு வேறு அரிசி ரகங்கள் கலந்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநில அரிசி என்பதால் அதற்கு "சோனா' என பெயரிட்டு விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.ஸ்டீம் பாயில் அரிசிவெளி மாநில அரிசி விலை குறைந்திருந்த போதிலும், உள்ளூர் அரிசி விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. காரணம், புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அரிசியே இந்த விலை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் நெல்லை ஊற வைத்து அவியல் போட்டு உருவாக்கப்படும் அரிசி தரமாக இருப்பதோடு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.ஆனால், அதிக நேரம் வேக வைக்க வேண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் இதுபோன்ற அரிசியை விரும்புவதில்லை. நெல்லை ஊறல் போடாமலேயே நீராவியைக் கொண்டு வேகவைத்து அரைக்கப்படும் அரிசியில், குறைந்த நேரத்தில் சாதம் சமைக்க முடிகிறது என்பதால் ஸ்டீம் அரிசியை விரும்பி வாங்கும் நிலை உள்ளது. இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் அரிசி கிலோ ஒன்று 3 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. குறுவை அறுவை துவங்கினால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|