மானிய நிலுவை வழங்க உர நிறுவனங்கள் கோரிக்கைமானிய நிலுவை வழங்க உர நிறுவனங்கள் கோரிக்கை ... ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கிராமங்களுக்கு செல்லும் நுகர்வோர் சாதன நிறுவனங்கள் :வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளதால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
01:22

வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளதால், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள், கிராமங்கள், அவற்றை ஒட்டியுள்ள சிறிய நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளதாக, தெரியவந்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால், உள்நாட்டில், பல தொழில்துறை நிறுவனங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகி உள்ளதுடன், அவற்றின் வளர்ச்சி விகிதமும் பின்னடைவை கண்டுள்ளது.
வேலைவாய்ப்பு :மேலும், நகர்புறங்களில் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சப்பாட்டால், தொழில் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் செலவினம், மிகவும் குறைந்து போயுள்ளது. மேலும், பலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை கூட ஒத்தி போட்டு வருகின்றனர்.இந்நிலையில், நாட்டில் பல மாநிலங்களில், பருவ மழை நன்கு பெய்து வருவதால், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், ஒட்டு மொத்த அளவில், தானிய உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள், கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில், விற்பனையை அதிகரிக்கும் வகையில், தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2012-13ம் நிதியாண்டின் பிற்பகுதியில் இருந்து, நடப்பு நிதிஆண்டின், ஜூலை வரையிலுமாக, நுகர்வோர் சாதனங்கள் விற்பனை, நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகரித்து உள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில்( அக்.,-டிச.,), நுகர்வோர் சாதனங்கள் விற்பனை வளர்ச்சி, 15.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதேசமயம், இக்காலாண்டில், கிராமப்புறங்களில் இவற்றின் விற்பனை வளர்ச்சி, 22.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
அதே போன்று, கடந்த நிதிஆண்டில், நான்காவது காலாண்டில், நகர்புறங்களில் இந்நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, 9.8 சதவீதம் என்ற அளவிலும், கிராமப்புறங்களில், 17.1 சதவீதம் என்ற அளவிலும், நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்), இவை முறையே, 9.2 சதவீதம், 14.3 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
கடந்த 2012ம் ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், டிராக்டர் விற்பனை, 1.75 லட்சம் என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டின் இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
பயணிகள் கார்:இந்நிலையில், கணக்கீட்டு காலத்தில், பயணிகள் கார் விற்பனை, 5.39 சதவீதம் சரிவு அடைந்து, 10.40 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 9.84 லட்சமாக சரிவடைந்துள்ளது. இருப்பினும், கணக்கீட்டு காலத்தில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, 0.7 சதவீதம் மட்டும் உயர்ந்து, 57.10 லட்சம் என்ற எண்ணிக்கை யிலிருந்து, 57.51 லட்சமாக சற்று உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில், வேளாண் உற்பத்தி நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், கிராமப்புறங்களில், இருசக்கர வாகனங்கள் குறிப்பாக, மோட்டார் சைக்கிள்கள் விற்பனை நல்ல அளவில் வளர்ச்சி காணும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை பொது இயக்குனர் சுகாட்டோ சென் தெரிவித்தார்.
மொபைல் போன்கள், பிளாட் வகை "டிவி'க்கள் போன்றவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவனம், கிராமப்புறங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில், அதன் மின்னணு சாதனங்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், தீவிரமாக களம்இறங்கியுள்ளது.
இதே போன்று, வீடியோகான் நிறுவனமும், கிராமப்புறங்களில் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதிகளவில் கிளைகளை நிறுவி வருவதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி எஸ்.எம்.சிங் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்:ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், கிராமப்புறங்களில் அதன் மோட்டார்சைக்கிள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இந்நிறுவனம், ஆண்டுக்கு, புதிதாக, 500 வினியோக மையங்கள் துவக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில், 5,500 வினியோக மையங்கள் இருப்பதாக, இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) அனில் துவா தெரிவித்தார்.
ஒட்டு மொத்த அளவில், நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் மொத்த விற்பனையில், கிராமப்புறங்களின் பங்களிப்பை, 40 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளன.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)