ஓணம் பண்டிகை : ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை உயர்வுஓணம் பண்டிகை : ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை உயர்வு ... நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாலை வசப்படும் நிசான் மைக்ராவில் பயணித்தால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
15:49

ஆட்டோமொபைல் துறையின் ஜப்பானிய ஜாம்பவானான நிசான், இந்தியாவில் 2010ல், அறிமுகப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த அதிக விற்பனையான ஹேட்சி பேக் தான் நிசான் மைக்ரா. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய என்ட்ரி லெவல், வேரியன்ட் மைக்ரா எக்ஸ் இ., உடன் சேர்த்து, மைக்ராவில் மொத்தம் எட்டு வேரியன்ட்கள் உள்ளன. சிறந்த செயல்திறன் தனித்தன்மை மற்றும் சக்தியுடன் எம்மாதிரியான சாலையிலும், தயக்கமின்றி பயணிக்க உதவுகிறது, நிசானின் மைக்ரா.

மைக்ராவின் செயல்திறன்: இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1,198 சிசி திறனுடன், 6,000 ஆர்பி எம்மில் 77பிஸ் பவரையும், 4,000 ஆர்.பி.எம்மில் 104 என்.எம் டார்க்கையும் வழங்குகிறது. இதன் டிஓஎச்சி 12 வால்வ் 3 சிலிண்டர் இன்ஜின் சிறந்த செயல்திறனுடன், நிறைவான மைலேஜ்øஐயும் தருகிறது. இதன் 1.5 லிட்டர் எஸ்சிஎச்சி 8 வால்வ், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 1,461 சிசி திறனுடன் 4,000 ஆர்பிஎம்மில் 64 பி.எஸ் பவரையும், 2,000 ஆர்.பி.எம்.மில் 160 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

இதன் பெட்ரோல் வெர்ஷனின் சிபிடி என்ற கன்ட்னிவஸ் வேரியிபில் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உள்ளதால், ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் மிகச் சிறப்பான ஆக்சிலரேஷன் மற்றும் மைலேஜை வழங்குகிறது. அதே போல் இதன் காமன் ரெயில் ப்யூவல் சிஸ்டம் மென்மையான மற்றும் எரிபொருள் சிக்கனம், வெகு சிறப்பாக வழங்குகிறது. 0-100 கி.மீ., வேகத்தை, 13.3 நொடியில் அடைவதுடன், 150-160 கி.மீ., என்ற அதிகபட்ச வேகத்தை சுலபமாக அடைகிறது.

புதிய தொழில்நுட்ப அம்சங்கள்: ஐ.கீ: இதன் ஐ.கீ பர்சிலோ, பாக்கெட்டிலோ இருக்கையில், காரின் கைப்பிடியில் உள்ள ஒரு பட்டனை தட்டியே காருக்குள் செல்லவும், உள்ளிருக்கும் ஒரு பட்டனை தட்டியே, ஸ்டார்ட் செய்யவும் முடியும்.

ஸ்டியரிங் கன்ட்ரோல்: இதன் ஸ்டியரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல் மூலமும், புளூடூத் உடனான ஹேன்ட்ஸ் ப்ரீ போன் சிஸ்டம் மூலமும் கவனம் கலையாமல், ஓட்டுனர் தன் பயணத்தை சுகமாய் அனுபவிக்கலாம்.

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா: ரியர் வ்யூ மிர்ரருடன் சேர்ந்த, கேமரா கவனமாய் வழிநடத்த சுலபமாகவும், சுகமாகவும் எங்கு வேண்டுமானாலும், பார்க் செய்ய உதவுகிறது இத்தொழில்நுட்பம்.

பாதுகாப்பு அம்சங்கள்: மைக்ராவில் கொடுக்கப்பட்டுள்ள, ஓட்டுனர் மற்றும் முன்புற பயணியின் முன் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது. இதிலுள்ள, பாலோ மீ ஹோம் விளக்கு வண்டியை பார்க் செய்து விட்டு, நான் சிறிது தூரம் போகும் வரையில், ஒளிர்ந்து பாதையில் பாதுகாப்பை வழங்குகிறது. இதில் ப்ரேக் அசிஸ்ட் பிஏ மற்றும் எலக்ட்ரானிக் பிரேக்கில், டிஸ்ட்ரிபியூஷன் கொண்டு ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளதால், திடீர் ப்ரேக்கிங்கின் போது, சக்கரங்கள் ஆட்டப்படாமல் வண்டியை தேவைக்கேற்ப திருப்பிக் கொள்ள முடிகிறது.

மைக்ராவின் உட்புறம்: உயர்தரமான பொருட்கள் கொண்டு, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள உட்புறம் பார்வைக்கும், உணர்விற்கும் சுகமாய் இருக்கிறது. சென்டர் கன்சோலின் பியானோ ப்ளாக் நிறம் கவர்ச்சியாக இருக்கிறது. இரண்டு நிறங்களின் கலவையில், பளிச்சென்று மிளிர்கிறது. மைக்ராவின் உட்புறம்.

மைக்ராவின் வெளிப்புறம்: நன்கு செதுக்கப்பட்ட முன்புற, க்ரில், முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் கட்டமைப்பான பாடி கொண்டுள்ளது மைக்ரா. எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் வெளிப்புற ரிவர் வ்யூ மிர்ரர், ஒரு பட்டன் மூலம் தேவைக்கேற்ப திரும்பவும், மடிக்கவும், பார்க் செய்யவும் ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. காரை பார்க் செய்த பின், தானாகவே மடித்துக் கொள்கிறது. இந்த ரிவர் வ்யூ மிர்ரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகர்புற சாலையானாலும், நெடுஞ்சாலை பயணமானாலும், மலை மற்றும் கரடுமுரடான சாகசப் பயணமானாலும் பாதுகாப்பாகவும், சுகமாகவும், சுலபமாகவும் பயணிக்க பெரிதும் உதவுகிறது நிசான் மைக்ரா என்றால் மிகையல்ல.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)