பதிவு செய்த நாள்
16 செப்2013
09:28

புதுடில்லி : கச்சா எண்ணெய் விற்பனைக்கான முழுத் தொகையை, இந்திய ரூபாய் மதிப்பில் பெற, ஈரான் திடீரென்று மறுத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, இந்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
பொருளாதார தடை : அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவை, அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது, பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கான ஈரானின் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டன.
அதே சமயம், பொருளாதார தடை காரணமாக, ஈரானில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, அமெரிக்க டாலரில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் மதிப்பில், 45 சதவீதத்தை, இந்திய ரூபாயில் வழங்க, மத்திய அரசு முன்வந்தது. எண்ணெய் சுத்திகரிப்பு எஞ்சிய, 55 சதவீத தொகையை, மாற்று ஏற்பாடு செய்யும் வரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வைத்திருப்பது என, முடிவு செய்யப்பட்டு, அதன்படி தற்போது வர்த்தகப் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க, ஈரான் முயற்சி மேற்கொண்டது. மேலும், கச்சா எண்ணெய் விற்பனைக்கான பல கோடி ரூபாய், இந்திய வங்கியில் முடங்கி உள்ளதை பயன்படுத்திக் கொள்ளவும் ஈரான் முடிவு செய்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான முழு தொகையையும், ரூபாயில் பெற்றுக் கொள்ள ஈரான் முன்வந்தது. அதன்படி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டது.
அன்னிய செலாவணி
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டது. இதனால், கச்சா எண்ணெய்க்காக செலவிடும் அன்னியச் செலாவணி குறையும் என்பதுடன், அது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறையை குறைக்கவும், ரூபாய் மதிப்பை நிலை நிறுத்தவும் உதவும் என, மத்திய அரசு மதிப்பிட்டது.
இது குறித்து, பெட்@ராலிய துறை அமைச்சர் வீரப்ப மொ#லி, அண்மையில் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், சென்ற 2012-13ம் நிதியாண்டைப் போன்று, நடப்பு நிதியாண்டிலும், ஈரானில் இருந்து தினமும், 2.60 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால், 850 கோடி டாலர் அன்னியச் செலாவணி மிச்சமாகும் என, மொய்லி குறிப்பிட்டிருந்தார். ஆனால், இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதற்குள் ஈரான் சுதாரித்துக் கொண்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், கச்சா எண்ணெய் விற்பனை வாயிலான லாப வரம்பு குறைந்து விட்டதை ஈரான் உணர்ந்தது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, கச்சா எண்ணெய்க்கான தொகையை, 100 சதவீதம் இந்திய ரூபாயில் பெறும் திட்டத்தை திடீரென்று நிறுத்தி விட்டது. கச்சா எண்ணெயின் மதிப்பில், 45 சதவீதத்தை ரூபாயிலும்,
55 சதவீதத்தை யூரோ மதிப்பிலும் பெற, ஈரான் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, பெட்ரோலிய துறை செயலர் விவேக் ரே கூறுகையில், ""ஈரான் கச்சா எண்ணெய்க்கான தொகையை, 100 சதவீதம் ரூபாயில் பெறுவதற்கான ரசீதை வழங்கி வந்தது. இந்நிலையில், திடீரென அதை நிறுத்தி விட்டது. இது தொடர்பாக, அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளாம்'' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|