பதிவு செய்த நாள்
16 செப்2013
18:26

பெங்களூரு: நடப்பு 2013-14ம் நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பம்-பீ.பி.ஓ. துறை, 12 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு, 8,500 கோடி டாலரை (5.10 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, "நாஸ்காம்' தெரிவித்துள்ளது.
சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ., துறை, 10.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதையடுத்து, இத்துறையின் ஏற்றுமதி வருவாய், 7,600 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் மீது கொண்டுள்ள நம்பிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இத்துறையின் ஏற்றுமதி சிறப்பான அளவில் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இத்துறை, 12-14 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி காணும் என, "நாஸ்காம்' அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|