பதிவு செய்த நாள்
18 செப்2013
00:11

புதுடில்லி:தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவடைந்து வந்த, நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ. பி.சி.,) தெரிவித்துள்ளது.
இதன்படி, மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 2.18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 468 கோடி டாலராக (28,080 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில்,458 கோடிடாலர் என்ற அளவில் இருந் தது.ஐரோப்பா மற்றும் புதிய சந்தைகளான,லத்தீன் அமெரிக்கா,ஆப்ரிக்க போன்ற நாடுகளில், இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்தே, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்று மதி, வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது என, இ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|