பதிவு செய்த நாள்
18 செப்2013
00:12

கோவை:வரும்,2013-14ம்பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.70 கோடி பொதிகளாக அதிகரிக் கும்.இது,நடப்பு 2012-13ம் பருவத்தில், 3.50 கோடி பொதிகளாக இருக்கும் என,இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐ.சி. எப்.,) தெரிவித்து உள்ளது.
மேற்கண்ட மொத்த உற்பத்தியில், குஜராத் மாநிலத்தின் பங்களிப்பு மட்டும், 1.20 கோடி பருத்தி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆந்திராவின் பருத்தி உற்பத்தி, 75 லட்சம் பொதிகளாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இதன் உற்பத்தி, 70 லட்சம் பொதிகளாகவும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் பருத்தி உற்பத்தி தலா, 60 லட்சம் பொதிகளாகவும் இருக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.
இது தவிர,மத்திய பிரதேசம் (18 லட்சம் பொதிகள்),கர்நாடகா (16 லட்சம்), தமிழகம் (5 லட்சம்), ஒடிசா (4 லட்சம்) மற்றும் இதர மாநிலங்கள் (2 லட்சம் பொதிகள்) ஆகியவற்றின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும்.பருத்தி அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில்,தென் மேற்கு பருவமழை சிறப்பாக உள்ளது. இதையடுத்து,பருத்தி விளைச் சலுக்கேற்ற சூழல் நிலவுவதால், வரும் பருவத்தில், இதன் உற்பத்தி நல்ல அளவில் அதிகரிக்கும் என, ஐ.சி.எப்., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|