பதிவு செய்த நாள்
18 செப்2013
00:16

புதுடில்லி:நாட்டின் அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 17.8 லட்சம் அதிகரித்து, 67.44 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 67.26 கோடியாக இருந்தது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் (சி.ஓ.ஏ.ஐ.,) கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனம்:மதிப்பீட்டு மாதத்தில், ஏர்செல் நிறுவனம், மிகவும் அதிகபட்சமாக, புதிதாக, 8.76 லட்சம் வாடிக் கை யாளர்களை ஈர்த்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின், ஒட்டுமொத்த அலைபேசி சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 6.26 கோடியாக அதிகரித்து உள்ளது.பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், புதிதாக, 8.33 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை,19.22 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அலைபேசி சேவையில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 28.50 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
வோடபோன்:கணக்கீட்டு மாதத்தில், ஐடியா நிறுவனம், புதிதாக, 7.52 லட்சம் வாடிக்கை யாளர்களை ஈர்த்து கொண்டுள்ளது.இதையடுத்து,இந்நிறுவனத்தின் அலைபேசி வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில், 12. 60 கோடியாக அதிகரித்து உள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 18.69 சதவீதமாக உள்ளது. இருப்பினும், வோட போன் நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 85 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, இந் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 15.43 கோடியாக குறைந்து உள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 22.88 சதவீதமாக உள்ளது.
இதேபோன்று,மதிப்பீட்டு மாதத்தில்,யுனிநார் நிறுவனம், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 3.22 கோடியாக சரி வடைந் துள்ளது.மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறுவனமும், 2.48 லட்சம் வாடிக்கை யாளர்களை இழந் துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், 38.42 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வீடியோகான் :அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், வீடியோகான் நிறுவனத்தில், புதிதாக, 1.58 லட்சம் வாடிக்கை யாளர்கள் இணைந்துள்ளனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் அலைபேசி வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை, 29.29 லட்சமாக வளர்ச்சி கண்டு உள்ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|