பதிவு செய்த நாள்
18 செப்2013
00:24

புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம், இறக்குமதி செய்யப்படும் தங்க நகை மீதான ”ங்க வரியை, 10 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை :ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. குறிப்பாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக அதிகரித்தது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கும் இது முக்கிய காரணமாகும். நடப்பு கணக்கு பற்றாக்குறையை, கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அர”ம், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இதையடுத்து, நடப்பு 2013ம் ஆண்டில், இதுவரையிலுமாக, தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை, மத்திய அரசு, மூன்று முறை உயர்த்தியது. தற்போது, தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில், ஒட்டு மொத்த தங்கம் இறக்குமதி, 290 கோடி டாலராக இருந்தது. இதில், தங்க நகைகளின் இறக்குமதி மதிப்பு, 13.76 கோடி டாலராக இருந்தது. நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 162 டன் னாக மிகவும் அதிகரித்திருந்தது. இதை குறைக்கும் வகையிலேயே, மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தாய்லாந்து : இந்நிலையில், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து, குறைந்த விலையில், தங்க நகைகள் இறக்குமதி செய்யப் படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது, தங்க நகைகள் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|