பதிவு செய்த நாள்
18 செப்2013
00:26

காரைக்குடி:தமிழகத்தில்,ஆலைகளின் செயற்கை தட்டுப்பாட்டால்,சிமென்ட் விலை மூட்டைக்கு,100 ரூபாய் அதிகரித்து, 400 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.தமிழகத்தில், தினமும், 200 டன்கள் வரை சிமென்ட் உற்பத்தியாகிறது. தற்போது, தமிழகத்தில் கட்டுமான துறை வளர்ச்சி பெற்று, பல அடுக்கு மாடி கட்டடங்கள், வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
முகவர்கள்:இதன் காரணமாக, கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.கடந்த ஓராண்டாக, சிமென்ட் மூட்டை, 265 ரூபாய் முதல் 310 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த, அக்டோபர் மாதம், சிமென்ட் மூட்டை, 390 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வரும் செப்.,19 முதல், மூட்டையை, 400 ரூபாய்க்கு விற்குமாறு விற்பனை முகவர்களை, ஆலைகள் வலியுறுத்தி வருகின் றன. டீசல் விலை உயர்வு, தீபாவளிக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை, ஈடுகட்ட சிமென்ட் ஆலை நிர்வாகங்கள், விலை உயர்வை கையாளுகின்றன.ஆலைகள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சிமென்ட் விலையை உயர்த்தி வருவதாக, கட்டுமான பொறியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தட்டுப்பாடு:செட்டிநாடு, அகில இந்திய கட்டுனர் (பில்டர்ஸ்) சங்க முன்னாள் தலைவர் பெரியகருப்பன் கூறுகையில், ""கடந்த செப்.,15 முதல், சிமென்ட் சப்ளையை நிறுத்தி, செயற்கை தட்டுப் பாட்டை ஏற்படுத்தி உள்ளனர்.செப்.,19 முதல், ஒரு மூட்டையை, 400 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு உள்ளனர். சிமென்ட் டீலர்களுக்கும், விலை பட்டியல் வந்து உள்ளது. விலையை குறைக்க கோரி, ஆலை நிர்வாகத்திடம், பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் ஜெ.,விடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|