பதிவு செய்த நாள்
18 செப்2013
11:09

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.58 புள்ளிகள் அதிகரித்து 19856.61 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.39 புள்ளிகள் அதிகரித்து 5872.75 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சில்லரை முதலீட் டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத் துடன் முடிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம்,நுகர்பொருட்கள்,உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப்பங்குகளுக்கு தேவை காணப் பட்டது. அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை, குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|