டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80ரூபாய்டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80ரூபாய் ... ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக்: டிவிஎஸ் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக்: டிவிஎஸ் ...
வர்த்தகம் » ஜவுளி
"யார்னெக்ஸ்' சர்வதேச கண்காட்சி 3 நாட்கள் :திருப்பூரில் நாளை துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
11:45

திருப்பூர்:சர்வதேச அளவிலான "யார்னெக்ஸ்' கண்காட்சி, துணிகளுக்கான "டெக்ஸ் இந்தியா' ஜவுளி கண்காட்சி, திருப்பூர், திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், நாளை (19ம் தேதி) துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 76க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பங்கேற்கும், சர்வதேச ஜவுளி நூல் கண்காட்சி ஆண்டுதோறும் திருப்பூரில் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இக்கண்காட்சி, திருப்பூர் திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நடைபெற உள்ளது.பருத்தி, கம்பளி முதலான இயற்கை நூலிழைகள், நவீன ரக பேன்சி மற்றும் கலப்பு நூல்கள் மற்றும் சிந்தடிக் ரகங்கள் கண்காட்சியில் இடம்பெறும். சோயாபீன் மற்றும் மூங்கில் பொருட்களில் தயாரிக்கப்பட்ட நூல்கள், நைலான் நுண்ணிய நூல்கள், "மோடல்' மற்றும் "டென்சல்' நூல்கள், தீ எதிர்ப்பு திறன் வாய்ந்த பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் நூல்கள், அன்றாட பணிகளுக்கு ஏற்ற துணிகளை தயாரிக்கும் உயர் தொழில்நுட்ப பாலியஸ்டர் நூல்கள் மற்றும் நூலிழைகள், தூய பட்டு,"லினன்' மற்றும் சணல் நூல்கள், மதிப்பு கூட்டப்பட்ட பருத்திமற்றும் கலப்புரக நூல்களும் கண்காட்சியில் இடம்பெறும்.

எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா பிரைவேட் லிட்., நிறுவன செயல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: "யார்னெக்ஸ் 2013' கண்காட்சி மூலமாக, திருப்பூர், கோவை, சேலம், கரூர், ஈரோடு, மதுரை, குமாரபாளையம், மும்பை, டில்லி, ஆமதாபாத், கோரேகான், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அமெரிக்கா, மியான்மர், இலங்கை, இங்கிலாந்து, தாய்லாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களை எளிதில் அணுக முடியும்."டெக்ஸ் இந்தியா 2013' என்ற டெக்ஸ்டைல் சோர்சிங் கண்காட்சியும், புதிய வியாபார தொடர்புகளை உருவாக்க உதவியாக, "பிஸினஸ் நெட்வொர்க்கிங் போரம்,' ஆகிய நிகழ்ச்சியும், கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். புதிய நிறுவனங்களும், உயர்தர தயாரிப்பாளர்களும் பங்கேற்பதால், கண்காட்சி அதிக வரவேற்பை பெறும்."டெக்ஸ் இந்தியா' கண்காட்சியில், "அல்ட்ராபன்' துணி, "சிங்கில் ஜெர்சி' மற்றும் "இன்டர்லாக்' துணி ரகங்கள், "ஆர்கானிக்' பருத்தி துணிகள், "காட்டன் லைக்ரா பிளெண்டு'கள், "கிரே பேப்ரிக்', "நிட்டட்' மற்றும் "வோவன்' துணி, சாயமேற்றிய மற்றும் பிராசஸ் செய்த துணிகள், "இன்டர்லைனிங்'குகள், எம்ப்ராய்டரி நூல், பட்டன், "லேஸ்', "ஜிப்', உள்ளாடை மற்றும் வெளிப்புற ஆடைகளுக்கான துணை பொருட்கள் என அனைத்து வகையான தயாரிப்புகளும் இடம்பெறும். நாளை (19ல்) துவங்கி, 21ம் தேதி வரை கண்காட்சி நடக்கும். தினமும் காலை 10.00 முதல் இரவு 7.00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.=இயற்கை நூலிழைகள், நவீன ரக பேன்சி மற்றும் கலப்பு நூல்கள் மற்றும் சிந்தடிக் ரகங்கள், சோயாபீன் மற்றும் மூங்கில் பொருட்களில் தயாரிக்கப்பட்ட நூல்கள், நைலான் நுண்ணிய நூல்கள், "மோடல்' மற்றும் "டென்சல்' நூல்கள் கண்காட்சியில் இடம்பெறும்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)