பதிவு செய்த நாள்
18 செப்2013
18:20

காலாண்டிற்கு ஒரு முறை புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூபிடர் என்ற பெயரில் புதிய 110சிசி ஸ்கூட்ரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் நடந்த இதற்கான விழாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் பங்கேற்றார். அவர் பேசுகையில்," வரும் ஜனவரியில் ஸ்கூட்டி ஸெஸ்ட் என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். மேலும், அடுத்தடுத்து புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். ஜூபிடருக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஃபீனிக்ஸ் 125சிசி பைக் மார்க்கெட்டில் சிறந்த பைக்காக பெயர் வாங்கியுள்ளது. மாதத்திற்கு 10,000 ஃபீனிக்ஸ் பைக்குகள் விற்பனையாகிறது. மேலும், விற்பனையை உயர்த்தும் விதத்தில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|