இரண்டு - மூன்று வாரத்தில் வெங்காயம் விலை குறையும் - சரத்பவார்இரண்டு - மூன்று வாரத்தில் வெங்காயம் விலை குறையும் - சரத்பவார் ... டாட்டாசன்ஸ் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை  துவங்க ஒப்பந்தம் டாட்டாசன்ஸ் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை துவங்க ஒப்பந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மெர்சிடெஸ் -பென்ஸ் ஜி.எல்.க்ளாஸ் 350 சி.டி.ஐ.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2013
21:08

மெர்சிடெஸ்- பென்ஸ், இரண்டாம் தலைமுறை ஜி.எல்.க்ளாஸ் சொகுசு எஸ்.யு.வி.யை, சென்ற மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. பென்சின் அமெரிக்க டஸ்கலூசா உற்பத்தி சாலையை விட்டு, வெளியே தயாரிக்கப்பட்ட முதல் வாகனம் ஜி.எல்.கிளாஸ் 350 சி.டி.ஐ. என்ற, இந்த எஸ்.யு.வி.பூனே சக்கானில் உள்ள, பென்சின் உலகத் தரமான உற்பத்தி சாலையில் தயாரிக்கப் பட்டுள்ள, இந்த எஸ்.யு.வி. சென்ற மாத இறுதிக்குள்ளாகவே, 100 வாகனங்கள் விற்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்புதிய ஜி.எல். கிளாஸ் 350 சி.டி.ஐ. மிகவும் விஸ்தாரமான இடவசதியுடனும், சொகுசு அம்சங்களுடனும் உள்ளதால், எஸ்.யு. வி.க்களில் க்ளாஸ் இடத்தை பிடித்துள்ளது.

உறுதியான தனித்துவமான வெளிப்புறத் தோற்றம், முழுமையான வசதி மற்றும் சொகுசளிக்கும் உட்புற வடிவமைப்பு, சுலபமாய் கையாளக் கூடிய தொழில்நுட்ப அம்சங்கள், ஓட்டுனரின் தோழனாகவும், பயணிப்போரின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது இந்த எஸ்.யு.வி. இதில் உள்ள புதிய தொழில்நுட்ப அம்சங்கள், முழு, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டி.எஸ்.ஆர்., இ.எஸ். ஆர்., 4இ.டி.எஸ்., மற்றும் 4மேட்டிக், ஏர்மேட்டிக் பொன்றவைகளாகும்.இதில் உள்ள ஈகோ ஸ்டார்ட் - ஸ்டாப் அம்சம் எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக்குவதால், 14.8 சதவீதம், குறைந்த எரிபொருள் பயன்பாடு இதில் கிடைக்கிறது. இதன் வி6 டீசல் மாடலில் உள்ள ஏர்மேட்டிக், எவ்வளவு கடினமான சாலையிலும், சுலபமாக பயணிக்க உதவுகிறது. இதன் ஆக்டிவ் பார்க்கில் தானாக ஸ்டியர் செய்து, பார்க் செய்ய உதவுகிறது. மூன்று அடுக்கு இருக்கைகள் விரைவில் நீளும், "சன் ரூப்' கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. டெக்னாலஜி கொண்ட, 7 அங்குல கலர் டிஸ்ப்ளே உள்ள மல்டி மீடியா, "கமாண்ட்' ஆன்-லைன் அம்சத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெர்சிடெஸ் - பென்ஸ் ஆப்ஸ்களையும், ஜி.பி.எஸ். சிஸ்டத்தையும் இயக்க முடியும்.

இதன் மேம்படுத்தப்பட்ட, வி6 டீசல் இன்ஜின், 2,987 சி.சி. திறனுடன், 190 கி.வார்ட்ஸ்/258 எச்.பி., பவரை, 3,600 ஆர்.பி.எம்மில் வழங்கக் கூடியதாகவும், 619 என்.எம். டார்க்கை, 1,600 - 2,400 ஆர்.பி.எம்மில் வழங்கக் கூடியதாகவும் உள்ளது. இதன் சக்தி வாய்ந்த இன்ஜின், 7ஜி - ட்ரானிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு, ஸ்திரமாக இயங்குவதுடன், 0 - 100 கி.மீ., மணிக்கு என்ற வேகத்தை, 7.9 நொடியில் அடைகிறது. அதிக நீளம், அகலம் மற்றும் உயரத்துடன் கம்பீரமாக, அதே நேரம், கவர்ச்சியாகவும் விளங்கும். இந்த எஸ்.யு.வி. செயல்திறனிலும் அதிகப்படியான சிறப்புக்களுடன் விளங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)