பதிவு செய்த நாள்
26 செப்2013
01:08

மும்பை:நுகர்வோர் சாதனங்களுக்கு வட்டி யில்லா கடன் வழங்கும் திட்டத்திற்குரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது.இதனால், இனி, டிவி ரெப்ரிஜரேட்டர், ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்கள் விலையுடன், தவணைக் காலத்திற்கான வட்டிச் செலவையும், நுகர்வோர் சுமக்க வேண்டும்.
போட்டி:நுகர்வோர் சாதனங்களை விற்பதற்காக, பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை, தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. இத்துடன், விற்பனை யாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, வட்டி யில்லாமல் சுலப தவணையில், நுகர்வோர் சாதனங்களை விற்பனை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின் றன.போட்டி அதிகரிப்பு காரணமாக வழங்கப்படும்,இது போன்ற சலுகைகள்,நடுத்தர மக்களை கவர்ந்திழுத்து, நுகர்வோர் சாதனங்களை வாங்கத் தூண்டுகின்றன.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், நுகர்வோர் சாதனங்களின் விற்பனை சுறுசுறுப்பாக நடை பெறும்,மொத்த விற்பனையில், வட்டியில்லா தவணை முறை திட்டத்தின் பங்களிப்பு, 30 சதவீதமாக உள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, ஜூலை முதல், நடப்பாண்டு, ஜூலை வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வகை கடன்களில்,நுகர்வோர் சாதனங்களுக்கான கடன் பிரிவு,குறிப்பிடத்தக்க பங்கை கொண்டு உள்ளது.வட்டி யில்லா கடன் என்று மேலெழுந்தவாரியாக தோன்றும் கவர்ச்சிகரமான வாசகத்தின் பின்னணியில், கண்டிப்பாக வட்டி விகிதம் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. அந்த வட்டி விகிதம்,மறைமுகமாக நுகர்வோர் சாதனங் களின் விலையில் சேர்க்கப்பட்டு, கடனாளியின் தலையில் சுமத்தப்படுகிறது.
இத்தகைய முறையற்ற வர்த்தகப் போக்கிற்கு முடிவு கட்டும் விதமாக, ரிசர்வ் வங்கி, வட்டியில்லா கடன் தவணை திட்டத்திற்கு தடை விதித்து உள்ளது.மேலும், டெபிட் கார்டு வாயிலாக செலுத்தும் தொகைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் சாதனங்கள் விலை,அதற்கான கடன்,அந்த கடனுக்கான வட்டி போன்றவற்றை, மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் நோக்குடன், இத்தகைய நடவடிக்கை எடுககப் பட்டுள்ளது.இதுவரை, வட்டியில்லா கடன் திட் டத்தில் நுகர்வோர் சாதனங்களை வாங்கியவர்கள், தங்களை அறியாமலே மறைமுகமாக குறிப்பிட்ட தொகை யை வட்டி யாக செலுத்தி வந்த நடைமுறைக்கு, தற்போது, ரிசர்வ் வங்கி முற்றுப் புள்ளி வைத்துஉள்ளது.
உண்மை விலை:இது, எதிலும் ஒளிவு மறைவற்ற செயல்பாடு தேவை என்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு வலுச் சேர்த்துள்ளது.இனி நுகர்வோர் சாதனங்களை வாங்குவோருக்கு, வட்டிச் செலவினம் கூடுதல் சுமையாக வெளிப் படையாக தெரியும். அவ்வளவுதான்.அதே சமயம், நுகர்வோர் சாதனங்களின் உண்மைவிலை வெளிச்சத்திற்கு வரும். போட்டி காரணமாக, விற்பனையாளர்கள், நுகர்வோர் சாதனங்களின் விலையை உயர்த்தாமல், தங்கள் லாப வரம்பை குறைத்துக் கொள்ளவும் கூடும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|