பதிவு செய்த நாள்
26 செப்2013
01:10

புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 80,242 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது,கடந்த நிதி யாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை (87,680 கோடி ரூபாய்) விட,8.48 சதவீதம் குறை வாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கணக்குகணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 13.43 சதவீதம் சரி வடைந்து, 1,599 கோடி டாலரில் இருந்து, 1,384 கோடி டாலராக குறைந்துள்ளது.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையிலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுத்து நிறுத்திடும் வகையிலும், மத்தியஅரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
மேலும், இவற்றின் மீதான, சுங்க வரியையும் மத்திய அரசு, உயர்த்தியுள்ளது.இது போன்ற காரணங்களால், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போதிய அளவிற்கு தங்கம் கிடைக்கவில்லை. இதுவும், இவற்றின் ஏற்றுமதி குறைவிற்கு காரணம் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில, 10.25 சதவீதம் குறைந்து, 314 கோடி டாலரில் இருந்து, 282 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
வளர்ச்சி:அதேசமயம், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 2.11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17,447 கோடி ரூபாயில்இருந்து, 17,814 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 46.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34,067 கோடி ரூபாயிலிருந்து, 49,850 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, டாலர் மதிப்பின் அடிப்படையில், 37.40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 623.72 கோடி டாலரில் இருந்து, 857 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
டாலர் மதிப்பு:கணக்கீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 133.96 லட்சம் காரட்டிலிருந்து, 154.12 லட்சம் காரட்டாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 57.12 சதவீதம் சரிவடைந்து, 36,404 கோடி ரூபாயிலிருந்து, 15,610 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டு உள்ளது. இது, டாலர் மதிப்பின் அடிப்படையில், 59.35 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 661 கோடி டாலரில்இருந்து, 269 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
தங்க காசுகள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 72.43 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 11,669 கோடி ரூபாயிலிருந்து, 3,217 கோடி ரூபாயாக சரிவுஅடைந்துள்ளது.நவரத்தினங்கள் ஏற்றுமதி, 123 சத வீதம் வளர்ச்சி கண்டு, 634 கோடி ரூபாயிலிருந்து, 1,415 கோடிரூபாயாக அதிகரித்துள்ளது.வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 156 சதவீதம் அதிகரித்து, 1,431 கோடி ரூபாயிலிருந்து, 3,666 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
கச்சா வைரம்:கணக்கீட்டு காலத்தில், கச்சா வைரம் ஏற்றுமதி, 36.83 சதவீதம்வளர்ச்சி கண்டு, 3,217 கோடி ரூபாயிலிருந்து, 4,402 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 74.8 சதவீதம் உயர்ந்து, 127 லட்சம் காரட்டில்இருந்து, 222 லட்சம் காரட் என்ற அளவில் அதிகரித்துள்ளது என, இக்கவுன்சிலின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|