தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... நாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி நாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி ...
பருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
13:55

திருப்பூர்: "அதிகப்படியான பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டில் விலை சீராக இருக்கச் செய்யும் வகையில், 70 லட்சம் பேலுக்குமேல் பஞ்சு ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நூல் விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்,,'' என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ், திருப்பூருக்கு நேற்று வந்தார். திருமுருகன்பூண்டி பப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னலாடை தொழில் நிலை, பிரச்னைகள் குறித்து, தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். ஜவுளித்துறை கமிஷனர் ஜோஷி, இயக்குனர் கீதா உடனிருந்தனர். பின்னலாடை தொழில் துறை சங்க பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசியதாவது: நூற்பாலைகள், பருத்தி நூல் விலையை உயர்த்துவதால், திருப்பூர் பின்னலாடை தொழில் மட்டுமின்றி, அதை சார்ந்துள்ள மற்ற தொழில் துறையினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்திய பருத்திக்கழகம், கொள்முதல் செய்யும் பருத்தியை தொழில் துறையினருக்கு மட்டுமே விற்க வேண்டும்; இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே 90 லட்சம் பேல் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தி ஆலோசனை குழு, ஓராண்டில் 1,000 மில்லியன் கிலோ பருத்தி நூல் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ஐந்து மாதங்களிலேயே நூல் ஏற்றுமதி, 590 மில்லியன் கிலோவை தொட்டுள்ளது. 60 சதவீத பருத்தி நூல், போட்டி நாடுகளான சீனா, வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், பின்னலாடை துறையினர் கடும் போட்டியை சந்திக்கின்றனர். சிறு, குறு தொழில் துறையினர் பயனடையும் வகையில், பழைய மெஷின்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். திருப்பூரில் இரண்டு லட்சம் பெண் தொழிலாளர்கள் பின்னலாடை துறை சார்ந்து பணிபுரிகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையை போக்க, 10 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில், மகளிர் ஹாஸ்டல் அமைக்கவேண்டும். இவ்வாறு, சக்திவேல் பேசினார்.

"டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த்:


ஆயத்த ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் "இங்க்' மீது 30 முதல் 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதை குறைக்க வேண்டும். "சிஸ்மா' பொதுச்செயலாளர் பாபுஜி: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு, குறிப்பாக, பின்னலாடை நகரான திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு, தனி முத்திரை வழங்கவேண்டும். "டிப்' தலைவர் மணி: ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை (டப்) விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு, தொழில் துறையினர் கூறினர்.

தொழில் துறையினர் கோரிக்கைகளை கேட்டறிந்த, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் பேசியதாவது: நடப்பாண்டு 370 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளுக்கு, 280 லட்சம் பேல் பருத்தி பஞ்சு தேவை. 70 லட்சம் பேல் பஞ்சு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது; 19 லட்சம் பேல் உபரியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டில் விலை சீராக இருக்கச் செய்யும் வகையில், 70 லட்சம் பேலுக்கு மேல் செய்யப்படும் பஞ்சு ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நூல் விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது ஹெக்டேருக்கு 550 கிலோ அளவில் பருத்தி உற்பத்தியாகிறது. பருத்தி உற்பத்தி குறித்த ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம், இந்த உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்து, பஞ்சு தேவை பூர்த்தியாகிவிடும். தொழில்துறை மேம்பாட்டுக்காக, வரும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில், "டப்' திட்டன் கீழ், 904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, தொழில் துறையினர் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்தி, ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, மத்திய அமைச்சர் சாம்பசிவ ராவ் பேசினார்.

"சைமா' தலைவர் ஈஸ்வரன், "டீமா' தலைவர் முத்துரத்தினம், "நிட்மா' தலைவர் ரத்தினசாமி, சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன், "டெக்மா' தலைவர் கோவிந்தசாமி, "சிம்கா' தலைவர் விவேகானந்தன், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கல்யாண சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

*தொடர்ந்து, அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர், ""திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து, நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உறுதியளித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)