பதிவு செய்த நாள்
26 செப்2013
22:45

வாசகர்கள் தங்களின் ஆட்டோ மொபைல் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் : vaganamalar@gmail.com
என் காரின் எக்சாஸ்ட்டில் அதிகமான சத்தம் வருகிறது. இது எதனால்?
எஸ்.சுகுமார், சென்னை
எரிபொருளும், காற்றும் சேர்ந்து எரிக்கப்பட்டபின் வெளியாகும் புகையை வெளியே கொண்டு சென்று, காற்றில் விடுவதே எக்சாஸ்ட் சிஸ்டத்தின் வேலை. எக்சாஸ்ட் பைப்பின் ஆரம்ப இடங்களில் ஓட்டை இருந்தால், புகை அந்த வழியே வெளியே கசிந்து, சத்தத்தை ஏற்படுத்தலாம். புகை பைப்பின் கடைசி வரை வந்து வெளியேறினால், இம்மாதிரி சத்தம் ஏற்படாது. இது உடனடியாய் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னையாகும்.
என் காரின் வின்ட்ஷீல்டில் சிறிய அளவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நான் மொத்த வின்ட்ஷீல்ட் கண்ணாடியையும் மாற்ற வேண்டுமா?
ஆர்.பிரபாகர், மதுரை
தேவையில்லை. கண்ணாடியின் விரிசல், 2.5 சென்டிமீட்டருக்கு அதிகமாக இருந்தாலோ, ஓட்டுனரின் பார்வைக்கு நேராக இடையூறாக இருந்தால் மட்டுமே, வின்டஷீல்டை மாற்ற வேண்டியிருக்கும். இல்லையேல், அதை வெளியில் தெரியாதபடி இணைத்து, பபரில் செய்து சரிசெய்யமுடியும். கண்ணாடியின் விரிசல், சிறியதாய் இருக்கும் போதே சரிசெய்து விடவேண்டும். ஏனென்றால், விரிசல் ஏற்பட்டுவிட்டால், அது உடனடியாக வேகவேகமாய் பெரிதாகி, முழு கண்ணாடியையும் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளிவிடலாம்.
நான் ப்ரேக்கை அழுத்தும்போது, அதிர்வது போன்றோ விட்டு விட்டு உதறுவது போன்றோ, ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது எதனால் இருக்கலாம்?
ஏ.கீர்த்திவாசன், பெங்களூரு
பதில்: உங்கள் காரில் ஏ.பி.எஸ்., பிரேக்கில் சிஸ்டம் இருந்தால், இதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஏ.பி.எஸ்., இருக்கும் வண்டிகளில், ப்ரேக்கை முழுவதுமாய் அழுத்தும்போது, இவ்வுணர்வு ஏற்படும். ஏ.பி.எஸ்., இல்லாத வாகனமாய் இருந்தால், ப்ரேக் டிஸ்க்கில் தேய்மானம் இருந்து மாற்ற வேண்டிய நிலையில், இம்மாதிரி உதறுவது போன்ற உணர்வு இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|