பதிவு செய்த நாள்
29 செப்2013
01:26

சென்னை:நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 416 ரூபாய் உயர்ந்து, 22,616 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரம் ஆபரண தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 2,775 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு 52 ரூபாய் உயர்ந்து, 2,827 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து, 22,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பத்து கிராம் சுத்த தங்கம், 555 ரூபாய் உயர்ந்து, 30,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ெவள்ளி 52.90க்கும், ஒரு கிலோ பார் ெவள்ளி 49,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்கட்கிழமை (23ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,803 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,424 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 24 ரூபாயும், சவரனுக்கு, 192 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|