பதிவு செய்த நாள்
29 செப்2013
01:34

புதுடில்லி:மத்திய நிதி அமைச்சகம், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.இதில், சிங்கப்பூரைச் சேரந்த, ஜூபிலன்ட் பார்மா, 1,145 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டு திட்டமும் ஒன்றாகும். இது தவிர, லோட்டஸ் சர்ஜிக்கல் ஸ்பெஷாலிட்டிஸ் (150 கோடி ரூபாய்), சிம்பயோடெக் பார்மா லேப் (306.19 கோடி ரூபாய்), மற்றும் அட்வான்ஸ்டு என்ஸைம் டெக்னாலஜீஸ் (200 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களும் அடங்கும்.
அதேசமயம், ஹிந்துஸ்தான் கோக–கோலா ஹோல்டிங்ஸ், எச்.பீ.ஓ., இந்தியா, பி5 ஆசியா ஹோல்டிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (மொரீஷியஸ்), ஆஸ்திரேலியா ஆசியா ரிசோர்சஸ் உள்ளிட்ட, 10 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதி ஒத்தி போடப்பட்டு உள்ளது.அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளின்படி, 1,200 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவிடம் (சி.சி.இ.ஏ.,) அனுமதி பெறுவது கட்டாயமாகும்.இவ்வகையில், அமெரிக்கா வின் மைலன் (10,668 கோடி ரூபாய்) மற்றும் ஐ.டீ.எப்.சி., டிரஸ்டி (5,500 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, சி.சி.இ.ஏ., அனுமதிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|