பதிவு செய்த நாள்
29 செப்2013
01:36

புதுடில்லி, செப்:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக சரிவடையும் என, பார்க்லேஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.உள்நாட்டில், சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறையின் உற்பத்தி மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருப்பது மற்றும் அடுத்த ஆண்டில் பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற அரசியல் சூழல் போன்றவை, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன.எனவே, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய மதிப்பீடான, 5.3 சதவீதத்திலிருந்து, 4.7 சதவீதமாக குறையும் என, பார்க்லேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|