பதிவு செய்த நாள்
30 செப்2013
00:13

மும்பை:எல்.ஐ.சி., பாலிசிக்கான சேவை வரியை, காப்பீட்டுதாரர்களிடம் இருந்து தனியே வசூலிக்க வேண்டும் என்ற, காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.இதனால், எல்.ஐ.சி., காப்பீட்டுதாரர்களின் பிரிமியம் செலவு அதிகரிக்கும். அதே சமயம், காப்பீட்டுதாரர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகை உயரும்.இதுகுறித்து, எல்.ஐ.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., நிறுவனம், காப்பீட்டுதாரர்களின் கணக்கில் சேரும் பிரிமியம் மற்றும் அது சார்ந்த முதலீட்டு வருவாயில் இருந்து, சேவை வரியை செலுத்தி வருகிறது.
நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 100 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளதால், இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.தற்போது, ‘இரிடா’ வின் உத்தரவால், இனி, எல்.ஐ.சி., காப்பீட்டு தாரர்களின் பிரிமியத் தொகைஉடன், 3 சதவீத சேவை வரி வசூலிக்கப்படும்.அதே சமயம், காப்பீட்டுதாரர்களின் நிதியில் இருந்து சேவை வரி செலுத்தப்படும் நடைமுறை முடிவிற்கு வரும். இதன் விளைவாக, காப்பீட்டுதாரர்களின் கணக்கில் உள்ள உபரி தொகை உயரும். இது, போனசாக காப்பீட்டுதாரர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|