பதிவு செய்த நாள்
30 செப்2013
00:16

புதுடில்லி:ஜி.எஸ்.எம்., அலைபேசி சேவையில், புதிதாக இணைந்த கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 1 சதவீதத்திற்கும் குறைவாக வளர்ச்சி கண்டு, 27.12 கோடியாக உயர்ந்துள்ளது.ஏர்டெல்:இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், இந்த எண்ணிக்கை, 27 கோடியாக இருந்தது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், ஏர்டெல் நிறுவனம், அதிகபட்சமாக, கிராமப்புறத்திலிருந்து, 3.9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 8.7 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே மாதத்தில், ஏர்செல் நிறுவனம், கிராமப்புறங்களிலிருந்து, 1.7 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து கொண்டுள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின்,ஒட்டு மொத்த கிராமப்புற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2.30 கோடியாக உள்ளது.வோடபோன்:மேலும், வோடபோன் நிறுவனம், இவ்வகையில், 1.2 லட்சம் புதிய வாடிக்கையாளர் களை இணைத்து கொண்டதையடுத்து, ஒட்டு மொத்த கிராமப்புற ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 8.3 கோடியாக உள்ளது.இருப்பினும், கணக்கீட்டு மாதத்தில், ஐடியா மற்றும் யுனிநார் நிறுவனங்கள் முறையே, 2 லட்சம் மற்றும் 2.4 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|