டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் சரிவுடாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் சரிவு ... முக்­கிய எட்டு துறை­கள்: 3.7 சத­வீதம் வளர்ச்சி முக்­கிய எட்டு துறை­கள்: 3.7 சத­வீதம் வளர்ச்சி ...
நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 2,180 கோடி டால­ராக உயர்வு நடப்பு நிதி­யாண்டின் முதல் காலாண்டில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2013
00:39

மும்பை:நடப்பு 2013 – 14ம் நிதி­ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன்வரை­யி­லான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 4.9 சத­வீ­த­மாக (2,180 கோடி டாலர்) அதி­க­ரித்­துள்­ளது.இது, சென்ற 2012 – 13ம் நிதி­யாண்டின் இதே காலத்தில், 4 சத­வீ­த­மாக (1,690 கோடி டாலர்) இருந்­தது என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
இறக்குமதி:இது­கு­றித்து, இவ்­வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை :மதிப்­பீட்டு காலத்தில், இறக்­கு­மதி அதி­க­ரித்து, ஏற்­று­மதிகுறைந்­துள்­ளதால், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை உயர்ந்­துள்­ளது.முதல் காலாண்டில், தங்கம் இறக்­கு­மதி, 730 கோடி டால­ராக உள்­ளது. இதை தவிர்த்து பார்த்தால், கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்­டுடன் ஒப்­பிடும் போது, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை , 3.2 சத­வீ­த­மாக (1,450 கோடி டாலர்) இருக்கும்.மதிப்­பீட்டு காலத்தில், ஏற்­று­மதி,1.5 சத­வீதம் சரி­வ­டைந்து, 7,390 கோடி டால­ராக உள்­ளது.
இது, சென்ற நிதி­யாண்டின் இதே காலத்தில், 4.8 சத­வீ­த­மாக (7,500 கோடி டாலர்) இருந்­தது,அதே சமயம், இதே காலத்தில், இறக்­கு­மதி, 3.9 சத­வீ­தத்தில் (11,890 கோடி டாலர்) இருந்து, 4.7 சத­வீ­த­மாக (12,220 கோடி டாலர்) உயர்ந்­துள்­ளது.இதே காலத்தில், வர்த்­தக பற்­றாக்­குறை, மதிப்பின் அடிப் ­ப­டையில், 4,380 கோடி டாலரில் இருந்து, 5,050 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.சேவைகள் ஏற்­று­மதி, 6.1 சத­வீ­தத்தில் (3,580 கோடி டாலர்) இருந்து, 2.1 சத­வீ­த­மாக (3,650 கோடி டாலர்) குறைந்­துள்­ளது.
சேவைகள்:அதே சமயம், சேவைகள் இறக்­கு­மதி, 19.3 சத­வீ­தத்தில் (2,080 கோடி டாலர்) இருந்து, 5.5 சத­வீ­த­மாக (1.970 கோடி டாலர்) ஆக, சரி­வ­டைந்­துள்­ளது.ஆக, மதிப்­பீட்டு காலத்தில், சேவைகள் வாயி­லான நிகர வருவாய், 1,500 கோடியில் இருந்து, 1,690 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.இதே காலத்தில், நிகர அன்­னிய நேரடி முத­லீடு, 380 கோடி டாலரில் இருந்து, 650 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் நிகர முத­லீடு, 25.2 சத­வீதம் உயர்ந்து, 1,640 கோடியில் இருந்து, 2,050 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.
அன்­னிய நேரடி முத­லீடு மற்றும் வங்­கிகள் வாங்­கிய கடன் அதி­க­ரித்­துள்­ளதால், நிகர முத­லீடு உயர்ந்­துள்­ளது.வங்­கி­களின் நிகர அன்­னிய கடன், 57 சத­வீதம் அதி­க­ரித்து, 300 கோடி டாலரில் இருந்து, 470 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.வர்த்தக கடன்:அதே சமயம், நிகர அன்­னியவர்த்­தக கடன், மாற்றம் எதுவும்இன்றி, 44 கோடி டால­ராக உள்­ளது. இவ்­வாறு அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கடந்த, 2012 – 13ம் நிதி­ஆண்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 4.8 சத­வீதம் அல்­லது 8,800 கோடி டால­ராக இருந்­தது.நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரிப்பால், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, சரி­வ­டைய துவங்­கி­யது.இதை கட்­டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.
குறிப்­பாக, தங்கம், தங்க ஆப­ர­ணங்கள் போன்­ற­வற்றின் மீதான இறக்­கு­மதி வரி அதி­க­ரிக்­கப்­பட்­டது.நடப்பு, 2013 – 14ம் நிதி­ஆண்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை, 3.7 சத­வீதம் அல்­லது 7,000 கோடி டால­ராக குறைக்கும் வகையில் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. நிதி பற்றாக்குறை:நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.4 லட்சம் கோடி ரூபாயாகவும், வருவாய் பற்றாக்குறை, 3.31 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன. இவை, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில் முறையே, 74.6 சதவீதம் மற்றும் 87.4 சதவீதம் என்ற அளவில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)