பதிவு செய்த நாள்
01 அக்2013
00:41
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 304 ரூபாய் குறைந்து, 22,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று, திடீரென குறைந்து காணப்பட்டது.சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட்ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,827 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,616 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 38 ரூபாய் குறைந்து, 2,789 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு, 304 ரூபாய்க்கு சரிவடைந்து, 22,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 400 ரூபாய் குறைந்து, 29,830 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,970 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|