பதிவு செய்த நாள்
01 அக்2013
12:54

சிங்கப்பூர் : அமெரிக்காவில் நிலவும் கடும் நிதி நெருக்கடி உலகளவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன் முதல்கட்டமாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூட அந்தநாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 8 லட்சம் பேர் வேலையிழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் அதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. தற்போது ஒரு பேரலின் விலை 38 சதவீதம் சரிந்து 101.95 டாலராக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|