பதிவு செய்த நாள்
01 அக்2013
14:22

புதுடில்லி : இந்திய பொருளாதாரம் முன்னேறி வருவதாகவும், அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி உதவுவதாகவும் மத்திய பொருளாதாரம் விவகாரத்துறை செயலர் அரவிந்த் மாயாராம் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாராமும் முன்னேறி வருவதாகவும் இதற்கு உறுதுணையாக மத்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை சீரமைத்து வருவதாகவும், நடப்பாண்டு கணக்கு பற்றாக்குறை 3.7 சதவீதம் எனும் அளவிலேயே இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அரவிந்த் மாயாராம் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|