பதிவு செய்த நாள்
01 அக்2013
15:20

புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1,04,964 கார்களை விற்பனை செய்து இருந்தது. கடந்தாண்டு இதே மாதத்தில் இது 93,988-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.8 சதவீதம் உயர்ந்து 90,399-ஆக உள்ளது.
மாருதியின் மினி கார்களான மாருதி 800, ஆல்டோ, ஏ-ஸ்டார், வேகனார் போன்ற கார்களின் விற்பனை 4.9 சதவீதம் உயர்ந்து 41,061ஆக இருக்கிறது.
இதேப்போல் இந்நிறுவனத்தின் ஸ்விப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ் ரக கார்களின் விற்பனை 16.9 சதவீதம் உயர்ந்து 20,828-ஆக உள்ளது. சிடன், டிசயர் ரக கார்களின் விற்பனையும் 42.9 சதவீதம் உயர்ந்து 16,708-ஆக உள்ளது.
அதேசமயம் ஆம்னி, ஈகோ ரக கார்களின் விற்பனை 30.5 சதவீதம் சரிந்து 8,767ஆக உள்ளது. மேலும் இந்நிறுவன கார்களின் ஏற்றுமதியும் சரிந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|