பதிவு செய்த நாள்
01 அக்2013
16:55

புதுடில்லி : மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்துக்கான விற்பனை 10.35 சதவீதம் சரிந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10.45 சதவீதம் சரிந்து 43,289-ஆக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் விற்பனை 48,342ஆக இருந்தது.
உள்நாட்டின் விற்பனை 40,574-ஆக உள்ளது. கடந்தாண்டு இது 45,263-ஆக இருந்தது. இதில் ஸ்கார்பியோ, சைலோ, பொலிரோ, வெரிட்டோ உள்ளிட்ட கார்களின் விற்பனை 18,916-ஆகும். மேலும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட விற்பனை 11.88 சதவீதம் சரிந்து 2,715-ஆக உள்ளது. கடந்தாண்டு இது 3,079ஆக இருந்தது.
அதேசமயம் கனரக வாகனங்களின் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 14,709-ஆக உள்ளது. கடந்தாண்டு இது 14,417ஆக இருந்தது. மூன்றுசக்கர வாகனங்களின் விற்பனை 5.86 சதவீதம் உயர்ந்து 6,403-ஆக உள்ளது.
இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|