பதிவு செய்த நாள்
02 அக்2013
00:18
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்து, 22,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்து வருவதால், கடந்த இரு தினங்களாக, உள்நாட்டில், ஆபரண தங்கம் விலை சரிவடைந்துள்ளது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,789 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,312 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் குறைந்து, 2,780 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 72 ரூபாய் சரிவடைந்து, 22,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 95 ரூபாய் குறைந்து, 29,735 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|